×

திருவாடானை அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் முதியவர் பலி

திருவாடானை, ஜன.9: திருவாடானை அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் முதியவர் பலியானார். டிரைவர் படுகாயம் அடைந்தார்.மதுரையிலிருந்து டைல்ஸ் கற்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. இந்த லாரி நேற்று அதிகாலை மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஒரத்தில் இருந்த பள்ளத்தில் பாய்ந்து வயல்காட்டில் கவிழ்ந்தது.

இதில் லாரி கிளினர் மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாளூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி(71) சம்பவ இடத்திலேயே இறந்தார். இதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் மலைராஜ் பலத்த காயம் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : victim ,truck accident ,Thiruvatanai ,
× RELATED கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி: இருவர் காயம்