×

ரெட்டிநலச்சங்கம் சார்பில் துறையூரில் ஐஏஎஸ் அகாடமி தொடங்கப்படும் மாநாட்டில் தீர்மானம்

துறையூர், ஜன.3: துறையூர் தாலுகா ரெட்டிநலச்சங்க எழுச்சி மாநாடு துறையூர் ஆத்தூர் சாலையில் உள்ள ஓமாந்தூரார் திடலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு துறையூர் ரெட்டி நலச்சங்க தலைவர் ராஜகோபாலன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஜி.ஆர்.ரெட்டி கொடியேற்றினார். நிழ்ச்சியில் தமிழக விளையாட்டுதுறை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, கவுரவ தலைவர் வெங்கடசுப்பு, கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்தனன்ரெட்டி, தமிழக முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தனலட்சுமி சீனிவாசன் கல்விகுழுமதலைவர் சீனிவாசன் ,காங்கிரஸ் கமிட்டி செய்திதொடர்பாளர் வேலுச்சாமி  பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாநாட்டில் முன்னாள் முதல்வர் ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறந்ததினத்தை அரசு விழாவாக கொண்டாட அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது. ரெட்டி மற்றும் ரெட்டியார் இனத்தில் உள்ள அனைத்து உட்பிரிவுகளையும் (கொண்டாரெட்டி நீங்கலாக) பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க அரசை கேட்டுக்கொள்வது. ரெட்டிகஞ்சம்பிரிவை மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து ஆணையிடகேட்டுக்கொள்வது, துறையூர் பகுதியில் ஏழை மாணவர்கள் கல்வி பயில அரசு சார்பில் கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். துறையூர் பகுதியில் உள்ள பட்டதாரிகள் அரசுதுறை, பொதுத்துறையில் வேலைவாய்ப்பை பெற சங்கத்தின் சார்பில் ஐஏஎஸ் அகாடமி  ஆரம்பித்து மாணவர்களுக்கு பயிற்சி தருவது உள்ளிட்ட  பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் துறையூர் தாலுகா சங்க செயலாளர் ரவி,பொருளாளர் நடராஜன், இலங்கை மகேஸ்வரன்,  கவுரவ ஆலோசகர் நீல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். துறையூர் நகர செயளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags : IAS Academy ,Red Fort ,
× RELATED திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில் நாளை...