×

தியாகி விஸ்வநாததாஸ் 78வது நினைவுதினம்

பரமக்குடி, ஜன.3: பரமக்குடி சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் சார்பாக சுதந்திர போராட்ட தியாகி மற்றும் நாடகத் தந்தை விஸ்வநாததாஸ் 78வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கூட்டத்திற்கு சங்க பொதுச்செயலாளர் ஹாரிஸ் தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் கட்சி கலைப்பிரிவு தலைவர் முகமது அப்பாஸ் வரவேற்றார். திமுக நகர் பொருளாளர் அக்பர்அலி, முன்னாள் வேளாண்மை உதவி இயக்குனர் மாமு.மணவாளான், மருத்துவர் சமூக நலச்சங்க தலைவர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பரமக்குடி டி.எஸ்.பி. சங்கர் விஸ்வநாததாஸ் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். இதில் மருத்துவர் நலசங்க நிர்வாகிகள் பாண்டியன், நாகராஜ், மகளிரணி செல்வி, தமயந்தி, சுமதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் தியாகிகள் சங்க நிர்வாகி சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

பூட்டிய வீட்டில்
20 பவுன் கொள்ளைசிவகாசி. ஜன. 3: சிவகாசி அருகே, திருத்தங்கல் ஸ்டேண்டர்ட் காலனியைச் சேர்ந்த மாடசாமி (70), பைனாஸ் அதிபர். மனைவி சுந்தரம்மாள். இருவரும் நேற்று முன்தினம் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டின் முன்புறகேட் வழியாக உள்ள குதித்து, கடப்பாறை மூலம் முன்கதவு மற்றும் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.20 பவுன் நகை, ரூ50 ஆயிரத்தை கொள்ளையடித்தனர். பின்னர் வீட்டில் பீரோ அறை முதல் வாசல்வரை மிளகாய்ப் பொடி தூவிவிட்டு தப்பிச் சென்றனர். நேற்று வீட்டிற்கு வந்த மாடசாமி மருமகன், வீட்டின் கதவு திறந்து கிடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, திருத்தங்கல் போலீசிற்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

Tags : Tyagi Viswanathas 78th Memorial ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை