×

விபத்து இழப்பீடு வழங்காத இன்சூரன்ஸ் அலுவலகம் ஜப்தி

ராமநாதபுரம், டிச.18: ராமநாதபுரம் சேதுபதி நகரை சேர்ந்த தர்மராஜ் மனைவி முனியம்மாள் (43). நகராட்சி துப்புரவு தொழிலாளி. கடந்த 6.11.2006ம் ஆண்டு ராமநாதபுரம் சின்னக்கடை தெருவில் துப்புரவு பணியிலிருந்த போது, அந்த வழியாக வந்த ராமநாதபுரம் ரயில்வே பீடர் ரோட்டை சேர்ந்த சுல்த்தான் செய்யது இபுராகீம் வந்த கார் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த முனியம்மாள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்தில் 2007ம் ஆண்டு மே மாதம் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் முனியம்மாளுக்கு இழப்பீடு தொகையாக ரூ.50ஆயிரம் வழங்க உத்தரவிட்டது. 11 ஆண்டுகளாக இழப்பீடு வழங்காத நிலையில் முனியம்மாள் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதில் 2015ம் ஆண்டு வட்டியுடன் சேர்த்து ரூ.82,974 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த தொகையும் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்காததால், ராமநாதபுரம் சாலை தெருவில் உள்ள நியூ இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகத்தை ஜப்தி செய்ய மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவப்பிரகாசம் உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று அமினா ரவிச்சந்திரன், மனுதாரர் முனியம்மாள் சென்றனர். இன்சூரன்ஸ் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் மற்றும் டேபிள், சேர்களை எடுத்த நிலையில், இன்சூரன்ஸ் அதிகாரிகள் முனியம்மாளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒருவாரம் கால அவகாசம் கேட்டுள்ளனர். இதையடுத்து ஜப்தி நடவடிக்ைக கைவிடப்பட்டது.

Tags : Japthi ,accident ,
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...