×

சேலம் சூரியன் எப்.எம்.,93.9ல் கொஞ்சம் பேச்சு, நிறைய பாட்டு நிகழ்ச்சி நாளை முதல் தொடக்கம்

சேலம், டிச.16: சேலம் சூரியன் எப்.எம்.93.9, கொஞ்சம் ேபச்சு, நிறைய பாட்டு என்ற புதுமையான நிகழ்ச்சியை நாளை (17ம் தேதி) முதல் ஜனவரி 17ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு வழங்கவுள்ளது.
தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக முழுக்க முழுக்க பெண் தொகுப்பாளர்களை கொண்டு, கடந்த ஜூலை 5ம் தேதி தனது ஒலிபரப்பினை தொடங்கிய சூரியன் எப்.எம். 93.9 மக்களின் விருப்பத்திற்கேற்ப பல்வேறு வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், நாளை(17ம் தேதி) முதல் ஜனவரி 17ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு கொஞ்சம் ேபச்சு, நிறைய பாட்டு என்ற புதுமையான நிகழ்ச்சியின் மூலம் இடைவிடாத இசை விருந்தை அளிக்கவுள்ளது. இந்நிகழ்ச்சியின் மூலம், தொகுப்பாளர்களின் பேசும் ேநரம் குறைக்கப்பட்டு, காலத்தால் அழிக்க முடியாத மனதை வருடிய இன்னிசைப் பாடல்கள், இடை விடாமல் உங்கள் செவிகளுக்கு விருந்தாக வரவுள்ளது. நாளை முதல் ஜனவரி 17ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரகுமான், வித்யாசாகர், தேவா ேபான்ற இசை ஜாம்பவான்களின் மனதை வருடும் பாடல்களை, தொடர்ந்து சூரியன் எம்.எம் 93.9ல் கேளுங்க, கேளுங்க, கேட்டுக்கிட்ேட இருங்க என சூரியன் எப்.எம். தெரிவித்துள்ளது.

Tags : Salem Suny FM ,
× RELATED சேகோ ஆலையில் பணியாற்றிய வடமாநில வாலிபர் திடீர் மாயம்