×

மண்டபம் கடலோர பகுதியில் சிற்பி, சங்குகள் சேகரித்து ஆய்வு

மண்டபம், டிச. 12: மண்டபம் பூங்கா தென்கடற்கரை பகுதியான மன்னார் வளைகுடா கடலோர பகுதியில் கடல் சிற்பி, சங்குகள் குறித்து முப்பையை சேர்ந்த இயற்கை வரலாற்று அமைப்பினர் ஆய்வு செய்தனர். மும்பையை சேர்ந்த இயற்கை வரலாற்று அமைப்பு சார்பில் அமைப்பு நிர்வாகிகள் சுமதன்,விஷல் மோனிஷா ஆகியோர் நேற்று மண்டபம் வந்தனர். அவர்கள், அதிக கடல்வாழ் உயிரினங்கள் வாழக்கூடிய மன்னார் வளைகுடா கடல் பகுதியான மண்டபம் கடற்கரை பூங்கா தென்கடற்கரை ஓரங்களில் அரியவகை கடல் சிற்பி,சங்குகள், சேகரித்து புகைப்படம் எடுத்து குறிப்பு எடுத்தனர். இது சம்மந்தமாக ஒரு ஆய்வு கட்டுரை வெளியிட உள்ளதாக தெரிவித்தனர். இந்த ஆய்வு கட்டுரையில் அழிவின் விளிம்பில் உள்ள கடல்வாழ் உயிரினங்களின் நிலை, அரியவகை சங்குகள் அழிந்து வருவதை தடுப்பது குறித்து பல்வேறு வகையான குறிப்புகள் இருக்கும் என தெரிவித்தனர்.

Tags : seaside ,Mandapam ,stables ,
× RELATED சென்னை கிண்டியில் அமைந்துள்ள...