×

இன்பென்ட் ஜீசஸ் பள்ளி சார்பில் நிவாரண பொருட்கள்

ராமநாதபுரம், டிச.7:  ராமநாதபுரம் இன் பென்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி, முத்துபேட்டை கௌசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி  மாணவர்கள், ஆசிரியர்கள் சார்பில் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட அதிராமபட்டணம் அருகில் உள்ள சென்டாய்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதி மக்களுக்கும், அப்பகுதியில படிக்கும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் உதவிட சோலார் லைட், பேனா பென்சில், ஜீயோமேட்ரி பாக்ஸ், நோட்டுகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு  தேவையான அரிசி, உணவுப் பொருட்கள், பாய், போர்வைகள், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி சுருள்கள் போன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள்களை பள்ளி வாகனத்தில் மூலம் அனுப்பி வைத்தனர். பள்ளியின் முதல்வர் சகோரெமண்ட், தலைமை ஆசிரியர் ஞானபிரகாசம் செயலாளர் சேசுதாஸ் இணைந்து பொருட்களை அனுப்பி வைத்தனர்.

Tags : Infant Jesus School ,
× RELATED 300 குடும்பங்களுக்கு திமுக சார்பில் உதவி