×

ஜப்தி செய்ய வந்தபோது பூட்டியிருந்ததால் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு சீல்

பரமக்குடி, டிச.5: பரமக்குடி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்கள் அலுவலகம் பூட்டி இருந்ததால், அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் செட்டியார் தெருவை சேர்ந்தவர் ஹைதர்அலி(57). இவருக்கு சொந்தமான இடத்தை, ஆதிதிராவிடர் மக்களுக்கு வீடு கட்டுவதற்காக கடந்த 1991ம் ஆண்டு ஒரு சென்ட் ரூ.30 வீதம் கொடுத்து ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக வாங்கியுள்ளனர். ஆனால் ஒரு சென்ட் நிலத்திற்கு ரூ.6 ஆயிரம் வீதம் வழங்கவேண்டும் என 1993ம் ஆண்டு பரமக்குடி கோர்ட்டில் ஹைதர்அலி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் சென்டிற்கு ரூ.600 வீதம் வழங்கவேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. தொகை கூடுதலாக இருப்பதாக ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஹைதர்அலிக்கு ஒரு சென்ட்டிற்கு ரூ.1200 வீதம் கொடுக்கவேண்டும் என உத்தரவிட்டது. ஒரு சென்டிற்கு ரூ..600 வீதம் மட்டுமே வழங்கினார்கள். மீதமுள்ள சென்டிற்கு பணம் வழங்காததால், மீண்டும் 2011ல் சென்னை உயர்நீதிமன்றத்தில்  ஹைதர்அலி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நிதிபதி ரூ.12 லட்சத்து 86 ஆயிரம் இழப்பீட்டு வழங்கவேண்டும் என உத்தரவிட்டும், வழங்க வில்லை.
இதுகுறித்து பரமக்குடி நீதிமன்றத்தில் ஹைதர்அலி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை செய்து நீதிபதி வெங்கடேசன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று கோர்ட்டு ஊழியர்கள் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்தபோது, அலுவலகம் பூட்டியிருந்ததால் ஜப்தி செய்ய முடியாமல் அலுவலகத்திற்கு சீல் வைத்து விட்டு சென்றனர்.

Tags : Adi Dravidar Welfare Office ,
× RELATED நாமக்கல் ஆதிதிராவிடர் நலத்துறை...