×

நரசிங்கபுரம் 7வது வார்டில் நகராட்சி பூங்காவிற்கு வேலி அமைக்க மக்கள் எதிர்ப்பு வழித்தடம் ஏற்படுத்தி தர கோரிக்கை

ஆத்தூர், நவ.27: சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி 7வது வார்டு, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடம் காலியாகவே உள்ளது. இங்குள்ள பூங்கா இடத்தில் நகராட்சி நிர்வாகம் வேலி அமைக்கும் பணியினை நேற்று துவங்கியது. இதற்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புவாசிகள், திட்டாநகர், இரட்டை மலை பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி மேற்கொண்ட வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஆணையாளர் சென்னகிருஷ்ணன், வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் நீண்ட நாட்களாக வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, திட்டா நகர், தெற்குகாடு, இரட்டை மலை ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் அந்த பகுதியிலிருந்து இங்கு வருவதற்கு, பூங்கா நிலத்தின் வழியாக சென்று வருகிறோம். தற்போது பூங்கா நிலத்திற்கு வேலி அமைத்தால் மாணவர்கள், பெண்கள், குழந்தைகள், பணிக்கு செல்வோர் பாதிக்கப்படுவர். பொதுமக்கள் செல்லும் வகையில் பாதைக்கு என இடத்தை ஒதுக்கி விட்டு மீதியுள்ள இடத்தில் வேலி அமைக்க வேண்டும் என்றனர். இதனையடுத்து ஆணையாளர் உரிய நடவடிக்கைக்கு பின் வேலி அமைக்கப்படும் என உறுதியளித்தார்.

Tags : protest ,municipality park ,Narasangapuram 7th Ward ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...