×

ஆத்தூரில் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை கலெக்டரிடம் புகார்

சேலம், நவ.23:  மேட்டூர்-ஆத்தூர் குடிநீர் திட்டத்தில் ஆத்தூர் பகுதியில் பத்து நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்று கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் மாவட்ட மதசார்பற்ற ஜனதாதள தலைவர் வேலாயுதம், கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மேட்டூர்-ஆத்தூர் குடிநீர் திட்டத்தில் பத்து நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அங்கு போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும். ஆத்தூரில் உள்ள அரசுபள்ளிகளில் குடிநீர், கழிப்பிட வசதி இல்லாத நிலையில் உள்ளது.

இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, மாணவர்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. சேலம் மையப்பகுதியில் உள்ள லீ பஜார் சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வரும் பயணிகள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். நேரில் ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீர் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.

Tags : drinking water supplier ,Athur ,
× RELATED விவசாயி வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது