×

வேதாளை கடலோர பகுதியில் வலை உலர்தளம் அமைக்க வேண்டும் மீனவர்கள் அரசுக்கு வலியுறுத்தல்

ராமநாதபுரம், நவ.21:  வேதாளை கடலோர பகுதியில் குடியிருந்து வரும் மீனவர்கள் வலை உலர்தளம் மற்றும் வலைபின்னல் தங்குதளம் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மண்டபம் அருகே மீனவர்கள் அதிகம் வசிக்கும் வேதாளை கிராமம் உள்ளது. 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் நாட்டு படகுகளை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதன் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாக பிழைப்பு நடத்தி வருகின்றனர். கடலோரம் குடிசைகளை அமைத்து குடும்பத்துடன் குடியிருந்து வரும் இவர்கள் வலை உலர்தளம் மற்றும் வலைபின்னல் தங்குதளம் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தினந்தோறும் கடலில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பும் இவர்களது வலைகளை உலர்த்துவதற்கென தனியாக இடம் இல்லை. மீன்களால் சேதமடைந்த வலைகளை சரி செய்வதற்கு கரையோரங்களில் விரிப்பதற்கு வசதியில்லாமல் குப்பைகள் நிறைந்துள்ளது. காற்று வேகத்திலும், கடல் சீற்றம் போன்ற காலங்களில் கடல்பாசிகள் கரைநெடுகிலும் மலைபோல குவிந்து விடுகிறது. வலைகளை கடற்கரையில் விரித்து உலர்த்துவதற்கும் முடியாமலும், ஒதுங்கிய கடல்பாசிகள் வலைகளில் சிக்கி அதனை சரி செய்ய முடியாமல் அவர்கள் சிரமம அடைந்து வருகின்றனர்.

Tags : Fishermen ,web deployment ,area ,
× RELATED உயிருக்கு பயந்து நடுக்கடலில்...