×

மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்

தொண்டி, நவ. 14: தொண்டி அருகே புதுப்பட்டிணத்தில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்ப்பட்டது.தொண்டி அருகே உள்ள புதுப்பட்டினம் பகுதியில் கடந்த சில நாள்களாக காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து காய்ச்சலை தடுக்கும் விதமாக சுகாதாரத்துறை மற்றும் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் இணைந்து  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் காஜாமுகைதீன் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் சந்தானராஜ் முன்னிலை வகித்தார். டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் கொசு மூலம் பரவுவதால் வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் சுகாதாரமான முறையில் பார்த்துக்கொள்ளவேண்டும். மேலும் தண்ணீரை மூடிவைத்துக்கொள்ளவேண்டும் என்று எடுத்துரைத்தனர். சாகுல்ஹமீது, கண்ணன், ராமு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : pupil ,land ,
× RELATED போராட்டம்