×

20 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக டெபாசிட் இழக்கும் பரமக்குடியில் ஐ.பெரியசாமி பேட்டி

பரமக்குடி, நவ.14: பரமக்குடியில் திமுக பூத் கமிட்டி குறித்து ஆய்வு செய்த திமுக துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தற்போது நடைபெறவுள்ள 20 தொகுதியின் இடைத்தேர்தலிலும் அதிமுக டெபாசிட் இழக்கும் என தெரிவித்துள்ளார். தமிழத்தில் பரமக்குடி உன்பட 20 தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உருவாகியுள்ளதால், பரமக்குடி தொகுதியின் பொறுப்பாளராக ஐ.பெரியசாமி தலைமை கழகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை பரமக்குடிக்கு வந்தார். பின்னர் மாவட்ட பொருப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், கழக தீர்மானக்குழு துணைத்தலைவர் சுப.த.திவாகரன், முன்னாள் எம்.எல்.ஏ.,திசைவீரன் ஆகியயோருடன் வார்டு வாரிய பூத்கமிட்டி குறித்து நியமனம் மற்றும் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தபோது, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தாகத்தை தீர்க்கும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம், பரமக்குடியில் சார்பு மற்றும் ஒருங்கினைந்த நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், பெண்களுக்கு தனி மருத்துவமனை, ஆற்றுப்பாலம், அரசு கல்லூரி, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட நெவாளர்களுக்கு இலவச புத்தாடை, இலவச வீடு, ரிபேட், மானியம் உள்ளிட்ட திட்டங்களை கொண்டுவந்தது திமுக ஆட்சியல், மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக்கு சேதுசமுத்திர திட்டம் வேண்டும் என்றால் திமுக.,வை ஆதரிக்க வேண்டும் என்றார்.

மேலும், தேர்தலில் அனைத்து கட்சிகளும் பணத்தை நம்பி இருக்கிறார்கள். நாங்கள் மக்களை நம்பியிருக்கோம், ரூ.200 நம்பியதால் மக்கள் ஏமாந்துவிட்டார்கள். இனிமேல் ஏமாறமாட்டார்கள். திமுக.,விற்கு அதிமுக போட்டியில்லை. வரும் இடைத்தேர்தலில் 20 இடங்களிலும் அதிமுக டெபாசிட் இழந்துவிடும். தமிழகத்தில் மக்கள் ஆட்சி நடக்கவில்லை. மத்தியிலிருந்து ரிமேட் மூலம் ஆட்சி நடத்தப்படுகிறது. இடைதேர்தலுக்கு பிறகு அதிமுக ஆட்சி இருக்காது. கூட்டணி குறித்து தலைமை முடிவு எடுக்கும் என்றார். பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் மாநில விவசாய அணி துணை செயலாளர் முருகவேல், முன்னாள் எம்.பி.,பவானிராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் அருளானந்த், பூமிநாதன், மாவட்ட வர்த்தக அணி துணைச்செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், சக்தி, மாவட்ட இளைஞரணி இன்பாகுரகு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் துரைச்சாமி, முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் செல்வம், நகர் இளைஞரணி சம்பத். பூத் கமிட்டி ஏற்பாடுகளை நகர் செயலாளர் சேது கருணாநிதி செய்திருந்தார்.

Tags : election ,Lok Sabha ,AI Bayarasamy ,AIADA ,
× RELATED மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப்...