×

திருவாடானை தாலுகா பகுதியில் பள்ளிகள் திறந்தும் புத்தகம் வரவில்லை மாணவர்களின் கல்வி திறன் பாதிப்பு

தொண்டி, அக். 26:  திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு முழுமையாக பாடபுத்தகம் வழங்கப்படாததால், மாணவர்களின் கல்வி திறன் பாதிக்கப்பட்டுள்ளது. உடன் கல்விதுறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை ஒன்றிய பகுதியில் 9 உயர் நிலைப்பள்ளிகளும் 13 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது இரண்டாம் பருவநிலை பாடங்கள் நடைபெறுகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு பாடபுத்தகம் வழங்கப்பட்டது. இதில் 10 மற்றும் பிளஸ்2 வகுப்பு மாணவர்கள் சிலருக்கு பாடபுத்தகம் வழங்க வில்லை. முதல் பருவம் கணக்கில் புத்தகம் வழங்கப்பட்டதால், இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. டிசம்பர் மாதம் வரையிலும் சேர் க்கை நடைபெற்றதால் தற்போது கூடுதல் மாணவர்கள் உள்ளனர். இதுகுறித்து ஆசிரியர்கள் தரப்பில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அதை கணக்கில் சேர்க்காமல் பழைய கணக்கில் புத்தகம் வழங்கியுள்ளனர்.

பொது தேர்வு எழுதும் மாணவர்கள் ஒரு மாதமாக புத்தகம் இல்லாமல் இருந்தால் கல்வி திறன் பாதிக்கும் என்பதால் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநில கல்வி அதிகாரிகள் புத்தகம் அனுப்பினால் மட்டுமே தர முடியும் தகவல் தெரிவித்துள்ளனர். இதில் பாதிக்கப்படுவது மாணவர்கள் மட்டுமே. கல்வி திறன் குறித்து ஒவ்வொரு பள்ளியாக ஆய்வு செய்யும் கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரி, பள்ளிகளுக்கு முறையாக பாடபுத்தகம் வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை கேட்டால் பள்ளியின் நிலை புரியும். 60 மாணவர்களில் 20 மாணவர்களுக்கு புத்தகம் இல்லை என்றால், தேர்வில் வெற்றி நிலை எவ்வாறு 100 சதவீதம் வரும். அரசு பள்ளி ஆசிரியர்களின் கடும் உழைப்பால் தற்போது அதிகளவில் மாணவர்கள் மதிப்பெண்கள் எடுத்து வருகின்றனர். இதில் இதுபோன்ற சில இடையூறுகளால் பள்ளின் பெயரும் மாணவனின் கல்வியும் பாதிக்கப்டுகிறது.

அதனால் மாவட்ட அதிகாரிகள் உயர்நிலை பள்ளியில் கூடுதல் கவனம் செலுத்தி உடன் பாடபுத்தகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கூடுதல் கவனம் தேவை பெற்றோர் கூறுகையில், போதிய வசதி இல்லாததால் அரசு பள்ளியில் எங்கள் பிள்ளைகளை சேர்த்துள்ளாம். இங்கு புத்தகமே தரவில்லை என்றால், எப்படி படிப்பார்கள். கடந்த 20 நாட்களாக ஆசிரியர்கள் புத்தகம் கேட்கிறோம் இன்னும் வரவில்லை என்றே கூறுகின்றனர். மற்ற மாணவர்கள் அடுத்தடுத்த பாடத்திற்கு சென்று விட்டதால், எங்கள் பிள்ளைகள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கலெக்டர் மற்றும் சிஓ இது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

Tags : school ,taluk area ,Thiruvatanai ,
× RELATED தீயணைப்பு துறையினர் அணைத்தனர்...