×

சேலம் மாவட்ட அளவிலான ‘கலாஉத்சவ் 2018’ கலைப்போட்டிகள்

சேலம், அக்.23:  சேலம் மாவட்ட அளவில் நடந்த கலா உத்சவ்’2018 என்ற பாரம்பரிய கலைப் போட்டிகளில், 750 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியம் சார்ந்த கலைப்போட்டிகள் கலாஉத்சவ்’2018 என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்திற்கான பாரம்பரிய நடனம், வாய்ப்பாட்டு, ஓவியம் மற்றும் இசைக்கருவிகள் வாசிக்கும் போட்டிகள் நடந்து வருகிறது.
சேலம் மாவட்ட அளவிலான போட்டிகள் கோட்டை மகளிர் அமல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. ஆர்எம்எஸ்ஏ திட்ட ஒருங்கிணைப்பாளர் மனோகரன் தலைமை வகித்தார். போட்டிகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இசை ஆசிரியர் குமாரி முன்னிலை வகித்தார். சிஇஓ கணேஷ்மூர்த்தி கலந்து கொண்டு, போட்டிகளை தொடங்கி வைத்தார்.  இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, பாரம்பரிய கலைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவர்கள் மற்றும் மாணவிகள் என தனித்தனியாக நடத்தப்பட்ட போட்டிகளில்  முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. ேமலும் இவர்கள், வரும் 30, 31ம் தேதிகளில் திருச்சியில் நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

Tags : Salam ,art galleries ,
× RELATED தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி...