×

கஞ்சமலையில் இன்று சித்தர் சிறப்பு விழா

இளம்பிள்ளை, ஏப்.30: சேலம் மாவட்டம் கஞ்சமலை சித்தர் கோயிலில் மேல் சித்தர் சிறப்பு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கஞ்சமலை அடிவாரத்தில் உள்ள சித்தர் கோயிலில் கடந்த 28ம் தேதி விநாயகர் வழிபாடுடன் விழா தொடங்கியது. நேற்று முன்தினம்(திங்கட்கிழமை) சித்தருக்கு சந்தன காப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது. இன்று(செவ்வாய்கிழமை) சித்தர் சிறப்பும், உருளு தண்டமும், பொங்கல் விழாவும் நடைபெற உள்ளது. விழாவில் சேலம் மற்றம் நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் விளைந்த தேங்காய், ராகி, அவரை, கரும்பு உள்ளிட்டவைகளை கொண்டு வந்து அவரக்கொட்டை களி கிண்டி சுவாமிக்கு படையில் இட்டு, நல்ல மழை வேண்டியும், விவசாயம் பெருகவும், நோயின்றி வாழவும், செல்வம் செழிக்கவும் வழிபடுவர். நாளை(1ம் தேதி) காளியம்மன் சிறப்பு அபிஷேகமும், சித்தர் திருவிளையாடலும், பூ மிதித்தல் விழாவும் நடைபெற உள்ளது. 2ம் தேதி(வியாழக்கிழமை) சத்தாபரணமும், 3ம் தேதி(வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீர் புறப்பாடும் நடைபெற உள்ளது.

The post கஞ்சமலையில் இன்று சித்தர் சிறப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Siddhar ,festival ,Ganjamalai ,Yumapillai ,Mel Siddhar ,Ganjamalai Siddhar temple ,Salem district ,Ganesha ,Siddhar Temple ,Ganjamalaya ,
× RELATED சித்ரா பவுர்ணமி விழா 10 ஆயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்