×

ஜமாத் தலைவரை வெட்டியவர்களை கைது செய்யக்கோரி மறியல்

சாயல்குடி, அக் 23: சாயல்குடி அருகே ஜமாத் தலைவரை. வெட்டியவர்களை கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். 3 லாரிகள் கண்ணாடியை உடைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி மற்றொரு தரப்பும் போராட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. எஸ்.தரைக்குடியிலுள்ள பொதுப்பணித்துறை கண்மாயில் தண்ணீரை பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் ஜமாத் தலைவர் முகமது அபுபக்கர் அரிவாளால் வெட்டப்பட்டார். இதுதொடர்பாக உமயவேலாயுதம், தங்கப்பாண்டி மற்றும் இவர்களின் சகோதரர் செந்தூர்பாண்டியன் மீது சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உமயவேலாயுதத்தை கைது செய்தனர்.

மற்ற இருவரையும் கைது செய்யக்கோரி அபுபக்கரின் உறவினர்கள் ேற்று தரைக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி(பொ) நடராஜன், கடலாடி தாசில்தார் முத்து லெட்சுமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதுபோன்று அபுபக்கர் உறவினர்களால், உமயவேலாயுதம் சகோதர்களுக்கு சொந்தமான 3 லாரிகளின் கண்ணாடிகள் நேற்று முன்தினம் அடித்து நொறுக்கப்பட்டது. இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என ஒருதரப்பினர் போலீஸ் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதனால் இருதரப்பினர் மோதும் சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : jamat leader ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை