×

வருமானம் பெருக வரப்பில் பயறு சாகுபடி வேளாண்மை அதிகாரி அட்வைஸ்

பரமக்குடி, அக்.12:  பரமக்குடி வட்டார வேளாண்மை அலுவலர் வருமானம் பெருக வரப்பில் பயறு சாகுபடி செய்யவேண்டும் என விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளார். வரப்பு உயர நீர் உயரும் என்பது பழமொழி. ஆனால் தற்போது வரப்பில் பயறு உயர வரவு உயரும் என்பது வேளாண்மையில் புதுமொழியாக உள்ளது. நமது உடம்பில் ரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்க புரதம் அவசியம். இது அதிகமாக பயறு வகைகளில் கிடைக்கிறது.  
தமிழகத்தில் 7.8 லட்சம் ஹெக்டேரில் பயறு வகைகளை பயிரிட்டு வருகிறது. மற்ற நாடுகளை காட்டிலும் நமது நாட்டில் தேவைகள் அதிகமாகியுள்ளது.
பயறு வகைகளை பயிரிடுவது குறித்து பரமக்குடி வேனாண்மை அலுவலர் சிவராணி கூறுகையில், வயல்களில் ஊடுபயிர்களாக பயறு வகைகளை சாகுபடி செய்யலாம்.

பயறு வகைகளை நெல் நடவு வயலின் வரப்புகளில் பக்கவாட்டில் கீழிருந்து உளுந்து, பாசிபயறு, தட்டைபயறு ஆகிய பயிர்களை சாகுபடி செய்யலாம்.
நெல் நடவு செய்வதுடன் ரைசோபியா, பாஸ்போ பாக்டீரியம் போன்ற நுண்ணுயிர் கலந்த பயறு விதைகளை 30 செ.மீ. இடைவெளியில் விதைக்கவேண்டும். தட்டை பயறுக்கு 45 செ.மீ. இடைவெளி விடவேண்டும். பயறுக்கு தனியாக நீர் பாய்ச்ச தேவையில்லை. இம்முறையில் கூடுதலான வருமானம் கிடைப்பதுடன், பயறு வகைகளில் தோன்றும் பொறிவண்டு போன்றவை பூச்சிகளை உட்கொண்டு விவசாயிகளுக்கு நன்மை செய்கிறது. ஆகையால், விவசாயிகள் தங்களின் வயல்களில் நெல் நடவு செய்திருந்தால் வரப்பில் பயறு வகைகளை சாகுபடி செய்து கூடுதல் வருமானம் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை