×

குருத்தோலை ஞாயிறு: போப் பிரான்சிஸ் பங்கேற்பு

வாடிகன்: வாடிகனின் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு திருப்பலியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய போப் பிரான்சிஸ் பங்கேற்றார்.  போப் பிரான்சிஸ் கடந்த சில தினங்களுக்கு முன் சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து ரோம் நகரிலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ், சனிக்கிழமை குணமடைந்தார். இந்நிலையில், குருத்தோலை ஞாயிறான நேற்று, வாடிகன் நகரின் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற திருப்பலியில் போப் பிரான்சிஸ் கலந்து கொண்டு குருத்தோலை பேரணியை தொடங்கி வைத்தார்.



Tags : Pope Francis , Palm Sunday: Participation of Pope Francis
× RELATED ஈரானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக...