×

ஈரானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேறுங்கள்: இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

 

துபாய்: ஈரான் நாணயமான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்ததை தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் போராட்டங்கள் தொடங்கின. 11 மாகாணங்களிலும் இந்த போராட்டங்கள் பரவி அரசியல் மாற்றத்துக்கான கோரிக்கையாக வலுப்பெற்றுள்ளது. போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் போலீசாரிடையே ஏற்பட்ட மோதல்கள், வன்முறை சம்பவங்களில் இதுவரை 2571 பேர் பலியாகி உள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலர் செய்தி நிறுவனத்திடம் இருந்த பெறப்பட்ட தரவுகளில் தெரிய வந்துள்ளது.

இதனிடையே ஈரானில் மரண தண்டனைகள் நடந்தால் மிக கடுமையான நடடிக்கை எடுப்பேன் என்று அமெரிக்க அதிபர் எச்சரித்து உள்ளபோதிலும், உச்சநீதிமன்ற நீதிபதி, நாட்டின் இறையாண்மைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களில் கைது செய்யப்படுபவர்களுக்கு விரைவான விசாரணை மற்றும் மரண தண்டனைகள் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளரான அலி லாரிஜானி மற்றும் கத்தாரின் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அப்போது பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளுகு்கும் , அமைதியான தீர்வுகளுக்கும் கத்தார் அரசு தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.  இதனிடையே ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து இந்தியக் குடிமக்களும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களும் உரிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் பகுதிகளை தவிர்க்க வேண்டும், ஈரானில் உள்ள இந்திய மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வணிக விமானங்கள் உட்பட கிடைக்கக்கூடிய போக்குவரத்து வழிகள் மூலமாக ஈரானை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘இந்தியர்கள் ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஈரானில் தற்போதைய நிலவரங்களை கருத்தில் கொண்டு இந்திய குடிமக்கள் மறு அறிவிப்பு வரும் வரை ஈரானிய இஸ்லாமியக் குடியரசுக்கு பயணம் செய்வதை தவிர்க்கவேண்டும் என்று மீண்டும் ஒரு முறை கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.

* மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள்

ஈரானில் பத்து நாட்களுக்கும் மேலாக அமைதியின்மை நீடித்து வரும் நிலையில், கொல்லப்பட்ட மற்றும் கைது செய்யப்பட்ட ஈரான் குடிமக்களின் எண்ணிக்கை குறித்து அறிந்து கொள்ளும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேசிய பாதுகாப்பு குழுவுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் ஈரான் அரசு போராட்டக்காரர்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

* கத்தாரில் இருந்து வெளியேற அமெரிக்க வீரர்களுக்கு உத்தரவு

ஈரான் அதிகாரி முந்தைய தாக்குதலைப் பற்றிக் கூறியதால், கத்தாரில் உள்ள முக்கிய அமெரிக்க ராணுவத் தளத்தில் உள்ள சில பணியாளர்கள் நேற்று மாலைக்குள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Iran ,Indian Embassy ,Dubai ,
× RELATED இஎப்எல் லீக் கால்பந்து மேன் சிட்டி அமர்க்களம்