×

தாய்லாந்தில் ஓடும் ரயில் மீது கிரேன் விழுந்து விபத்து: 22 பேர் உடல் நசுங்கி பலி

 

பாங்காக்: தாய்லாந்தில் கட்டுமானப் பணியின் போது ராட்சத இயந்திரம் ஓடும் ரயில் மீது விழுந்த விபத்தில் 22 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தாய்லாந்து நாட்டில் பாங்காக்கிலிருந்து 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகோன் ராட்சசிமா மாகாணத்தில், பாங்காக்கிலிருந்து உபோன் ராட்சதானி நோக்கி 195 பயணிகளுடன் ரயில் சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் ரயில் மீது, அதிவேக ரயில் பாதைக்கான கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத கிரேன் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு தீப்பிடித்தன. இடிபாடுகளுக்கிடையே சிக்கி 22 பயணிகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், மீட்புப் படையினர் துரிதமாகச் செயல்பட்டு கருவிகள் மூலம் இடிபாடுகளை அகற்றி காயமடைந்தவர்களை மீட்டனர். இதுகுறித்து பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர், ‘விபத்துக்கான காரணம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

Tags : Crane ,Thailand ,Bangkok ,Nakhon Ratchasima ,
× RELATED பொங்கல் வாழ்த்து கூறிய சிங்கப்பூர்...