பாங்காக்: தாய்லாந்தில் பாங்காக் அருகே ஓடும் ரயில் மீது கிரேன் விழுந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். தாய்லாந்த் தலைநகர் பாங்காக் ரயில் தண்டவாள கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அதிவேக ரயில் சேவைக்காக கட்டப்பட்டு வந்த பாலத்தில் இருந்த கிரேன், கீழே சென்ற ரயில் மீது விழுந்தது. பாலத்தில் கான்கிரீட் இணைப்புக்காக பயன்படுத்தப்படும் கிரேன் விழுந்ததில் ரயில் தடம் புரண்டு தீப்பிடித்தது.
ரயில் மீது கிரேன் விழுந்த விபத்தில் படுகாயம் அடைந்த 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிவேக ரயில் திட்டப்பணிக்காக பயன்படுத்தப்பட்ட கிறேன் சரிந்து விழுந்துள்ளது. அப்போது பயணிகள் ரயில் அவ்வழியாக வந்ததால் ரயில் பெட்டிகள் தரம் புரண்டு தீப்பிடித்தன. இந்த விபத்தில் பயணிகள் 22 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
