- EFL லீக் கால்பந்து
- நகரம்
- அரங்கம்
- லண்டன்
- மேன் சிட்டி
- புதிய கோட்டை
- EFL லீக் கோப்பை
- இங்கிலீஷ் லீக் கோப்பை
- மனிதன்…
லண்டன்: இஎப்எல் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் நேற்று, மேன் சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் நியூகேசல் அணியை வீழ்த்தியது. இங்லீஸ் லீக் கோப்பை கால்பந்து போட்டிகள், லண்டனில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் மேன் சிட்டி – நியூ கேசல் அணிகள் மோதின. துவக்கம் முதல் மேன் சிட்டி அணி வீரர்கள் அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்தினர். போட்டியின் பெரும்பகுதி நேரம் அவர்களின் கட்டுப்பாட்டிலேயே பந்து இருந்தது. இருப்பினும் முதல் பாதியில் அவர்களால் கோல் எதுவும் போட முடியவில்லை.
ஆனால், 2வது பாதியில் நேர்த்தியாக பந்தை கடத்திய அந்த அணியின் ஆன்டோய்னி செமன்யோ, 53வது நிமிடத்தில் தனது அணிக்காக முதல் கோல் போட்டு அசத்தினார். அதன் பின் போட்டியின் கடைசி கட்டத்தில் 90+9வது நிமிடத்தில் மேன் சிட்டி அணியின் ரயான் செர்கி தனது அணியின் 2வது கோல் போட்டு அசைக்க முடியாத வகையில் அணியை முன்னிலைப்படுத்தினார். அத்துடன் போட்டி முடிவுக்கு வந்தது. இதன் மூலம் மேன் சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது.
