×

தென்னாப்பிரிக்காவில் வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து: அடுத்தடுத்து வரிசையில் நின்ற வாகனங்கள் சேதம்

கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவில் அடுத்தடுத்து 40 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயமடைந்தனர். தென்னாப்பிரிக்காவின் குவாசுலு நதால் மாகாணத்திற்குட்பட்ட உம்லாங்கா பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. அப்போது அங்கு அதிவேகமாக தாறுமாறாக வந்த டெய்லர் லாரி கட்டுப்பாட்டை இழந்து வரிசையில் நின்று இருந்த வாகனங்கள் மீது மோதியது.

இதில் சில வாகனங்கள் நிலை தடுமாறி அப்படியே தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நின்று கொண்டிருந்த 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த அந்நாட்டு காவல்துறையினர் படுகாயமடைந்த ஒருவரை ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்த மேலும் சிலர் ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டனர்.

Tags : South Africa , South Africa, Vehicle, Truck, Accident, Queue, Vehicle, Damage
× RELATED 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!