வாஷிங்டன்: அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி தலைவராக ஜெரோம் பவல் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என அதிபர் டிரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ஜெரோம் பவல், அதிபர் டிரம்ப் சொல்வதற்காக வரியை உடனே குறைக்க முடியாது. பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகே வரி குறைக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். இதனால் டிரம்ப்புக்கும், பவலுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த சூழலில் ஃபெடரல் வங்கியின் செயல்பாடுகள் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. இதுகுறித்து ஜெரோம் பவல், “ஃபெடரல் வங்கிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருப்பது டிரம்ப்பின் விருப்பத்துக்கேற்ப வட்டி விகிதங்களை குறைக்காததற்காக தன் மீது சுமத்தப்படும் அழுத்தம். இது குற்றவியல் வழக்கு தொடர வழிவகுக்கும். ஃபெடரல் வங்கியின் சுதந்திரத்தை பாதிக்கும்” என கூறி உள்ளார்.
