×

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 4 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குஜ்தார் மாவட்டத்தில் ராகினி மார்க்கெட் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பொருத்தப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதில் 2 போலீசார் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 14 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து குண்டுவெடிப்பு நடந்த இடத்துக்கு சென்ற பர்கான் நிலைய போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். குண்டுவெடிப்பு குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Pakistan , Pakistan blasts, 4 dead
× RELATED கப்பலில் கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் கோடி...