×

வங்கதேசத்துக்கு இந்தியா ஆதரவு

டாக்கா: இந்திய வெளியுறவு துறை செயலாளர் வினய் குவாத்ரா நேபாள தலைநகர் காத்மண்ட்டில் இருந்து இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் மாலை வங்கதேசம் சென்றார். இதனை தொடர்ந்து மரியாதை நிமித்தமாக அவர் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடியின் வாழ்த்துக்களை அவர் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து இந்தியா-வங்கதேசம் இடையே பொருளாதாரம் மற்றும் பரந்த மற்றும் ஆழமான வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்பதை வெளியுறவு செயலர் வங்கதேச பிரதமரிடம் உறுதிபடுத்தினார்.

Tags : India ,Bangladesh , India supports Bangladesh
× RELATED 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!