×

ஸ்பெயினில் சுகாதார கட்டமைப்பை காக்க வலியுறுத்தி போராட்டம்: பதாகைகளுடன் லட்சக்கணக்கானோர் திரண்டனர்..!!

ஸ்பெயின்: ஸ்பெயின் நாட்டின் சுகாதாரத்துறையை பாதுகாக்க வலியுறுத்தி ஸ்பெயினில் லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தியதால் தலைநகர் மாட்ரிட் ஸ்தம்பித்தது. கொரோனா பரவிய காலத்தில் தொற்றினை மிக மோசமாக கையாண்டதாக ஸ்பெயின் அரசு மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அது முதல் ஆரம்ப சுகாதார மையம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிறந்த சேவை இல்லை எனவும் ஊழியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இதனால் அரசுக்கு எதிராக அதிருப்தியில் உள்ள மக்கள், தலைநகர் மாட்ரிட்டில் பேரணியாக சென்று பதாகைகளுடன் கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஸ்பெயினின் சுகாதார துறையை காக்க அரசு பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கவும் வலியுறுத்திய அவர்கள், தங்களது கோரிக்கைகளை கைகளை தட்டியும், இசையுடன் நடனமாடியும் வெளிப்படுத்தினர்.


Tags : Spain , Spain, health infrastructure, struggle
× RELATED 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!