×

சீனா பெருஞ்சுவரில் நிலவும் ரம்மியமான சூழல்: கட்டுப்பாடுகள் நீங்கியதால் பனியில் விளையாடி மகிழும் சுற்றுலா பயணிகள்

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் பலர் சுற்றுலா தளங்களுக்கு சென்று பனிப்பொழிவில் ரசித்து வருகின்றனர். சீனாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. இந்நிலையில், பனிப்பொழிவை காண சுற்றுலா பயணிகள் பலர் அங்கு வர தொடங்கியுள்ளனர்.

சீன பெருஞ்சுவரை பலர் ஆர்வமாக பார்வையிட்டு வருகின்றர். அங்கு பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் அங்கு நிலவும் ரம்மியமான காட்சி பயணிகளை அதிகம் கவர்ந்துள்ளது. அங்கு சுற்றுலா பணிகள் பணியில் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். தொடர் போராட்டத்தை அடுத்து சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன. இதனால் சீனர்கள் அருகாமையில் உள்ள நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் ஏராளமானோர் சீனாவிற்கு வந்துள்ளனர்.  



Tags : Great Wall of China , China, Great Wall, Control, Play, Enjoy, Tourist, Traveler
× RELATED 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!