×

தெற்கு சூடானில் அமைதி திரும்ப போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

ஜுபா: தெற்கு சூடானில் அமைதியை மீட்டெடுக்க வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. இதனால் ஏராளமான அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் போப் பிரான்சிஸ் 3 நாள் பயணமாக பிப்ரவரி 3ம் தேதி தெற்கு சூடானுக்கு சென்றார். அவரது வருகையையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதனிடையே, போப் பிரான்சிஸ் செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன் அங்கு நடந்த வன்முறை தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 27 பேர் பலியாகினர்.

இதுதொடர்பாக கவலை தெரிவித்துள்ள போப் பிரான்சிஸ், தெற்கு சூடானில் அமைதிகை மீட்டெடுக்க அனைவரும் பாடுபட வேண்டும். தெற்கு சூடானில் வன்முறையில் ஈடுபடும் கும்பல் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, ஒருவரையொருவர் மன்னித்து, அன்பை பரிமாற வேண்டும். கடவுள் நம்மை நேசிப்பது போல் அனைவரும் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும்” என்று கூறினார்.

Tags : Pope Francis ,South Sudan , Pope Francis appeals for peace in South Sudan
× RELATED ஈரானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக...