×

அந்தமானில் தேசிய கொடி ஏற்றுகிறார் அமித்ஷா

போர்ட் பிளேர்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான 23ம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு செல்கிறார். கடந்த 1943ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி அந்தமானில் உள்ள ஜிம்கானா மைதானத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

இதேபோன்று ஜனவரி 23ம் தேதி அதே இடத்தில் தேசியக் கொடியை உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்றுகிறார். அந்த மைதானம் தற்போது நேதாஜி மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags : Amit Shah ,Andaman , Amit Shah hoists the national flag in Andaman
× RELATED 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!