புதுச்சேரி: ‘உயர் நீதிமன்றத்தால் கேள்வி கேட்கக் கூடியவர்கள் கவர்னர்கள் அல்ல’ என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்து உள்ளார். தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் வீடு வீடாக சென்று காசநோய் அறிகுறி உள்ளதா என நடமாடும் எக்ஸ்ரே இயந்திரத்தின் மூலம் பரிசோதனை செய்யும் முகாம் மேட்டுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடந்தது. இந்த முகாமை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
பின்னர், ஆளுநர் தமிழிசை கூறுகையில்:
தமிழக கவர்னர் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. உயர் நீதிமன்றத்தால் கேள்வி கேட்கக் கூடியவர்கள் கவர்னர்கள் அல்ல. அவர்களின் நிலை அதைவிட மேலானது என்று அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தி இருக்கிறது. ஆரோவில்லை மேம்படுத்த வேண்டும் என்று கடுமையாக உழைக்கிறோம் ’ என்று தெரிவித்தார்.
