பாங்காங்: மியான்மரின் 75வது சுதந்திர தினத்தையொட்டி சிறையில் இருக்கும் 7012 கைதிகளை விடுவிப்பதாக அந்நாட்டின் ராணுவ தலைவர் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹெலாங் அறிவித்துள்ளார். மியான்மரின் 75வது சுதந்திர தினத்தையொட்டி நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் ராணுவ தலைவர் ஜெனரல் மின் ஆங் ஹெலாங் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் ராணுவ தலைவர் மின் ஆங் கூறியதாவது:
ஆளும் ராணுவ ஆட்சியில் இலக்காக வரையறுக்கப்பட்டுள்ள உண்மையான ஒழுக்கம்-வளர்ச்சிமிக்க பலகட்சி ஜனநாயக அமைப்பிற்கு பிற நாடுகள், சர்வதேச அமைப்புக்கள் மற்றும் மியான்மர் மக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். 75வது சுதந்திர தினத்தையொட்டி சிறையில் இருக்கும் 7012 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. கடுமையான குற்றங்களில் ஈடுபடாதவர்களின் தண்டனை காலம் குறைக்கப்படும்.
இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும். நாட்டில் அனைவம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களில் சில அரசியல் கைதிகளும் இடம்பெற்றுள்ளனர். எனினும் ஆங் சூகி விடுவிக்கப்படுவாரா என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை.