அமெரிக்கா: கொரோனா பரவலை தடுக்க சீனாவில் இருந்து வருவோருக்கு அமெரிக்கா, இத்தாலியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா நெகட்டிவ் சான்றிதழை விமானத்தில் ஏறும் முன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் தர அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. சீனாவில் இருந்து வருவோர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய இத்தாலி அரசு உத்தரவிட்டுள்ளது.