×

செங்கம் அருகே அதிகாலை கோர விபத்து அரசு பஸ் மீது 2 லாரிகள் மோதி 3 பேர் நசுங்கி பலி: 30 பேர் படுகாயம்

செங்கம்: கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 50 பேர் பயணித்தனர். பண்ருட்டியை சேர்ந்த டிரைவர் மணிவாசகம் (50) ஓட்டிச்சென்றார். கடலூரை சேர்ந்த இளவரசன்(40) கண்டக்டராக இருந்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் அருகே நேற்று அதிகாலை 2 மணியளவில் பஸ் சென்ற போது, சென்னையில் இருந்து நாமக்கலுக்கு கோழி தீவனம் ஏற்றிச் சென்ற லாரியை முந்திச் செல்ல டிரைவர் முயன்றார்.

அப்போது, எதிரே பெங்களூருவில் இருந்து காய்கறி லோடு ஏற்றி வந்த லாரியும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது. காய்கறி லோடு லாரியும் சாலையில் கவிழ்ந்தது. அதேநேரத்தில் கோழி தீவன லாரியும் அரசு பஸ்சின் பக்கவாட்டில் வேகமாக மோதியது. இதில் பஸ் டிரைவர் மணிவாசகம், லாரி லோடு மேன் ராஜேஷ்(37), 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் என 3 பேர் பலியாகினர். காய்கறி லாரி டிரைவர் சிவக்குமார்(35), பஸ் கண்டக்டர் இளவரசன் மற்றும் பயணிகள் உட்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

Tags : Sengam , Early morning accident, 2 trucks on government bus Collision, 3 killed
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...