திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி சுவாமி தரிசனம்

திருச்செந்தூர்: புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியில் நானும், ஆளுநரும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம் என்று முதல்வர் ரெங்கசாமி கூறினார். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நேற்று மாலை புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி சுவாமி தரிசனம் செய்தார். அவர் கோயிலில் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தார்.

பின்னர் வெளியே வந்த முதல்வர் ரெங்கசாமி பக்தர்களுக்கு தேங்காய், பழம், பிரசாதம் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தேன். தரிசனம் மிக சிறப்பாக இருந்தது. புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியில் நானும், ஆளுநரும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம்’ என்றார்.

Related Stories: