×

குண்டாசில் ரவுடி கைது

அண்ணாநகர்: அமைந்தகரை கதிரவன் காலனியை சேர்ந்தவர் நீலேஷ்குமார் (23). இவர் மீது கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி உட்பட 16 வழக்குகள் உள்ளன. கடந்த 2013ம் ஆண்டு வழிப்பறி வழக்கில், இவரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த அவர், அமைந்தகரை பகுதியில்,  கடந்த மாதம் 23ம் தேதி பட்டாசு கடை உரிமையாளர் ராஜன்  என்பவரை கத்தி முனையில் மிரட்டி ரூ.3,500 பறித்து சென்ற வழக்கில் அமைந்தகரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

தொடர் குற்றச் செயலில் ஈடுபடும் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க அண்ணாநகர் துணைஆணையர் விஜயகுமார், சென்னை மாநகர கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, ரவுடி நீலேஷை மீண்டும் குண்டர் சட்டத்தில் போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags : Gundazil , Guntas, rowdy arrested
× RELATED தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 14 பேர் குண்டாசில் கைது: காவல்துறை நடவடிக்கை