×

அதிகாலையில் வெளியே சென்றபோது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை

*ஆந்திராவில் பரபரப்பு

திருமலை : அதிகாலையில் வெளியே சென்றபோது இளம்ணெ் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் சீதாராமபுரம் கிராமத்தில் வசிக்கும் சுசரிதா எனும் 21 வயது திருமணமாகாத பெண். நேற்று அதிகாலை 5.30 முதல் 5.45 மணிக்கு இடையே வீட்டின் வெளியே இயற்கை உபாதை கழிக்க சென்றார். வெளியில் சென்றுவிட்டு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பெற்றோர் வீட்டின் சுற்றுப்புறத்தில் தேடி பார்த்தனர்.

அப்போது ரயில்வே டிராக் அருகே சுசரிதா ஆடைகள் கிழந்த நிலையில் பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் கொலை செய்யப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சீராளா கிராமிய காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மோப்பநாய், தடவியியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் பெண்ணின் செருப்பு, வெளியில் செல்ல எடுத்துச் சென்ற தண்ணீர் பாட்டில், இறந்தவரின் உடைகள் ஆகியவை கண்டறிந்தனர்.

இதனையடுத்து எஸ்.பி. வகுல் ஜிண்டால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, இந்த வழக்கை சவாலாக எடுத்து கொண்டு அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். 5 தனிப்படை அமைத்து இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post அதிகாலையில் வெளியே சென்றபோது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,SUSARITHA ,SIDARAMPURAM VILLAGE, PAPATLA DISTRICT, AP STATE ,
× RELATED சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு காரணமாக...