×

வழக்கறிஞர் கொலை வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 2 பேர் கைது

துரைப்பாக்கம்: திருவான்மியூர், அவ்வை நகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் கவுதம் (27), வழக்கறிஞர். இவர், கடந்த 11ம் தேதி திருவான்மியூர் திருவள்ளுவர் சாலையில் உள்ள தனியார் ஏடிஎம் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கண்ணகி நகரை சேர்ந்த கமலேஷ் (27) என்பவர், கவுதமுக்கு போன் செய்து, தான் இருக்கும் இடத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து கமலேஷ், தனது நண்பர்களான கொட்டிவாக்கம் நித்தியானந்த் (27), பெரும்பாக்கம் பார்த்திபன் (31) ஆகியோருடன் சம்பவ இடத்திற்கு வந்தார். அங்கு ஏற்பட்ட தகராறில், கமலேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் கவுதமை வெட்டினார். இதில், பலத்த கயாமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வழக்கில் கமலேஷ், நித்யானந்த், பார்த்திபன் ஆகியோர் திருவான்மியூர் போலீசில் சரணடைந்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய கொட்டிவாக்கம் இளங்கோ நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் குணசேகரன் (46), கொட்டிவாக்கம் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்த ஏசி மெக்கானிக் சதீஷ் ராஜ் (31) ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வழக்கறிஞர் கொலை வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Duraipakkam ,Advocate ,Gautham ,Thiruvanmiyur ,Avvai Nagar ,Thiruvalluvar Road ,Kamlesh ,Kannagi Nagar ,
× RELATED மம்மூட்டி படத்தை தொடங்கினார் கவுதம் மேனன்