×

புழல் சிறையில் கைதிகளிடம் 2 செல்போன்கள் பறிமுதல்

புழல்: புழல் சிறையில் கைதிகளிடம் இருந்து 2 செல்போன்களை சிறைக்காவலர்கள் பறிமுதல் செய்தனர். சென்னை புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் செல்போன்கள் பயன்படுத்துவதை தடுக்க சிறைக்காவலர்கள் அவ்வப்போது அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிறைத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில் காவலர்கள் நேற்று முன்தினம் சிறையில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, கஞ்சா வழக்கில் பெரியமேடு போலீசாரால் கைது செய்யப்பட்ட பூந்தமல்லியைச் சேர்ந்த அப்பு(எ) உதயா, வழிப்பறி வழக்கில் புழல் போலீசாரால் கைது செய்யப்பட்ட புழல் சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்(எ) பட்டன் சுரேஷ், திருட்டு வழக்கில் சூளைமேடு போலீசாரால் கைது செய்யப்பட்ட சூளைமேடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(எ) பாவாடை மணி ஆகியோர் தங்கிருந்த அறையின் கழிவறையில் பதுக்கி வைத்திருந்த 2 செல்போன்கள், பேட்டரி, சிம் கார்ட், சார்ஜர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் புழல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து 3 சிறைக் கைதிகளிடம் விசாரித்து வருகின்றனர்.

The post புழல் சிறையில் கைதிகளிடம் 2 செல்போன்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : prison ,Chennai ,Maghal Inquiry Jail ,Dinakaran ,
× RELATED ரவுடிகளுக்கு செல்போன் கொடுத்து உதவி வேலூர் மத்திய சிறை மனநல ஆலோசகர் கைது