×

இங்கிலாந்துக்கு நம்பிக்கையான எதிர்காலம் உருவாக்க பாடுபடுவேன்; பிரதமர் ரிஷி உறுதி

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக, கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்பி.க்களின் பலத்த ஆதரவுடன் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய பிரதமர் சுனக்கிற்கு நல்லெண்ண அடிப்படையில் தீபாவளி இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், புதிய  பிரதமராக பொறுப்பேற்றுள்ள  ரிஷி சுனக் லண்டனில் உள்ள பிரதமர் இல்லத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்து, தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘நம் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் பார்க்கக்கூடிய இங்கிலாந்தை உருவாக்க, இந்த பொறுப்பில் இருந்துகொண்டு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : England ,Rishi , I will strive to create a brighter future for England; Prime Minister Rishi confirmed
× RELATED 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!