×
Saravana Stores

பத்மநாபபுரம், சுனாமி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்களில் உடைப்பு-சாலையில் பெருக்கெடுக்கும் தண்ணீர்

கருங்கல் : சுனாமி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு 79 கடலோர குடியிருப்புக்கள், 17 பேரூராட்சிகள் மற்றும் 19 வழியோர குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  இதற்காக கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வழியாக ஐரேனிபுரம் முதல் சடையன்குழி, கிள்ளியூர், பாலூர், கருங்கல், மத்திகோடு, திக்கணங்கோடு, திங்கள்நகர் வரை சாலையின் நடுவே பாதிக்கப்பட்டுள்ள ராட்சத சிமெண்டு குழாய்கள் நீரின் அழுத்தம் தாங்காமல் உடைந்து வருகிறது.

 புதுக்கடை - திங்கள்நகர் சாலையின் நடுவில் புதைக்கப்பட்டுள்ள  ராட்சத குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைந்து சாலை மிகவும்  பழுதடைந்து மிகவும் மோசமாக காணப்படுகிறது. ந்நிலையில் நேற்று முன்தினம் காலை கருங்கலை அடுத்த மத்திகோடு அருகே உள்ள கருக்குப்பனை பகுதியில் ராட்சத குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இது பற்றி பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கூறினர். இதையடுத்து ஊழியர்கள் வந்து உடைப்பை சரி செய்தனர். இதனிடையே நேற்று முன்தினம் இரவில் மீண்டும் சரி செய்த அதே இடத்தில் ராட்சத குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு சாலை முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  தற்போது உடைந்து தண்ணீர் வெளியேறும் இடத்தில் கடந்த 8 மாதங்களில் 4 முறையும் தற்போது இரண்டு முறையும் என மொத்தம் 6  முறை ஒரே இடத்தில் ராட்சத குழாய் உடைந்துள்ளது.

 உடைந்த குழாயிகளை மாற்றி புதிய டிஐ பைப்புகள் அமைக்காமல் உடைந்த குடிநீர் குழாய்களை மீண்டும் மீண்டும் சிமென்ட் மற்றும் கெமிக்கலால் சீரமைப்பதால் குழாய்கள் அடிக்கடி உடைவதாக கூறப்படுகிறது. எனவே  மானான்விளை முதல் திக்கணங்கோடு பகுதி வரை உள்ள ராட்சத குடிநீர் குழாயை மாற்றி புதிய டிஐ  குழாய் பதிக்க  வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது போல் நேற்று மாலை மாத்திரவிளை பகுதியில் உள்ள சுனாமி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்தது.  
மார்த்தாண்டம்:  குமரி   மாவட்டத்தில் பத்மநாபபுரம் நகராட்சி பகுதியை உள்ளடக்கிய கூட்டு குடிநீர்   திட்டம் ₹225 கோடி செலவில் சில ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. ஆனால்   பணிகள் தரமாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. குடிநீர் குழாய்களின்   வால்வுகள் பொருத்திய இடங்களில் சுற்றிலும் தொட்டி போல் கட்டப்பட்டு  அவற்றின் மேல்  காங்கிரீட் சிலாப்புகள் போடப்பட்டன.

ஆனால் அவை 2, 3  நாட்களிலேயே  உடைந்தன. இதனால் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் குழிக்குள்  விழுந்து  விபத்தில் சிக்கினர். இது ெதாடர்பான செய்திகள் வெளியான உடனேயே  மீண்டும்  அரைகுறை பணிகள் செய்து முடிக்கப்பட்டன. அதன்பிறகு குடிநீர்  குழாய்களில்  தண்ணீர் பம்ப் செய்து சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது பல்வேறு  இடங்களில்  குடிநீர் குழாய்கள் உடைந்து, சாலைகள் பெயர்ந்து பல அடி  உயரத்திற்கு தண்ணீர்  பீய்ச்சி அடித்தது.

புதிதாக போடப்பட்ட தேசிய  நெடுஞ்சாலை வரை சேதமான  நிலையில், மீண்டும் பஞ்சர் ஒட்டி பல இடங்களில்  உடைந்த குடிநீர் குழாய்களை  சீரமைத்தனர். ஆனால் மீண்டும் மீண்டும் குடிநீர்  குழாய்கள் உடைந்து  பத்மநாபபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தரம்  குறைந்தவை என்பதை  நிரூபித்து வருகின்றன. இந்த  நிலையில் முளகுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட  கல்லுவிளை மற்றும்  வெள்ளிக்கோடு அருகே இரட்டான்விளை பகுதிகளில் இரு தினங்களுக்கு முன்  குடிநீர் குழாய் உடைந்து நீரூற்று போல தண்ணீர் வெளியேறியது.

இதில்   கல்லுவிளை பகுதியில் தண்ணீர் சாலையில் ஆறாக ஓடியது. இரட்டான்விளை பகுதியில்   மண் பெயர்ந்து பல அடி ஆழத்தில் குழியை உருவாகி உள்ளது. பின்னர் தண்ணீர்   வீணாவது நின்றது. இந்நிலையில் சாலையோரம் வால்வு பகுதியில் உள்ள சிலாப்புகள்  மூடப்படாமல் உள்ளது. இதனால் விபத்து  அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Tags : Padmanabhapuram ,Tsunami , Karungal: Under the Tsunami Joint Drinking Water Project, water will be drawn from the Tamiraparani river in Kulitura and 79 coastal settlements, 17
× RELATED அதிமுக கொடியை தலைகீழாக ஏற்றி டென்ஷனாக்கிய மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி