×

திருநின்றவூர் நகராட்சியில் சாலை, தெருக்களில் மழை நீர் தேக்கம்

ஆவடி: ஆவடி அருகே திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டில் பெரியார் நகர் உள்ளது. இங்குள்ள அனைத்து தெருக்கள், சாலைகளில் சாதாரண மழைக்கே முழங்கால் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஒருசில தாழ்வான வார்டுகளில் இடுப்பளவுக்குகூட மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைக் காலத்தில் சேறும் சகதியுமாக மாறி காணப்படும் சாலைகள், கோடை காலத்தில் குண்டும் குழியுமாக மாறிவிடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பெரியார் நகரில் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். அவரது உறவினர்கள் வந்தபோது, அப்பகுதி முழுவதும் மழைநீர் தேங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியாகினர்.

மேலும், இறந்தவரின் இறுதி சடங்குகள் அங்கு தேங்கியிருந்த மழைநீரிலேயே நடந்தது. அதேபோல், இறந்தவரின் சடலத்தையும் முழங்கால் அளவு தேங்கிய மழைநீரில் எடுத்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. எனவே, திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் தெருக்கள் மற்றும் சாலைகளை தரமான முறையில் சீரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர தொகுதி அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Thiruninnavur , Rain water stagnates on roads and streets in Thiruninnavur municipality
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...