×

அதிர வைக்கும் வீடியோ: தும்பிக்கையே துணை கரை புரளும் வெள்ளத்தில் பாகனுடன் மூழ்கிய யானை

பீகார்: பீகார் மாநிலத்தில் பெய்த கனமழையால், கங்கை ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைசாலி மாவட்டத்தில் உள்ள ரகோபுர் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த வெள்ளத்தில்  சிக்கிய யானை முழுவதுமாக  மூழ்கியது. அதன் மீது பாகனும் அமர்ந்திருந்தார். யானை, பாகனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதப்பட்ட நிலையில், யானை தனது தும்பிக்கையை மட்டும் தண்ணீருக்கு மேல் உயர்த்தி நீந்த தொடங்கியது. ஒரு கிமீ தூரத்துக்கு விடாமல் மூழ்கியபடியே  நீந்தி, பாட்னா கெதுக்கி என்ற இடத்தில் கரையேறியது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags : Bagan , Shocking video: Elephant drowns with Bagan in flood with trunk
× RELATED நாளை ஐஎஸ்எல் பைனல் மோகன்பகான்-மும்பை மோதல்