×

மீண்டும் கார்ல்சனை வீழ்த்தினார் ஆனந்த்

சென்னை: உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் நார்வே கிளாசிக்கல்  ஆன்லைன் செஸ் போட்டியில், இந்தியா சார்பில் தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்றுள்ளார். உலகின் நம்பர் 1 வீரர்  மேக்னஸ் கார்ல்சன் (நார்வே) உட்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 9 சுற்றுகளாக நடைபெறும் இத்தொடரில் ஹாட்ரிக் வெற்றி கண்ட ஆனந்த், 4வது போட்டியில் நூலிழையில் அமெரிக்க வீரர் வெஸ்லியிடம் தோற்றார். இந்நிலையில், கார்ல்சன் - ஆனந்த் நேற்று மோதிய ஆட்டம் 40 நகர்வுகளுக்கு பிறகு சமனில் நின்றது.  அதனால் ‘டைபிரேக்கர்-சடன்டெத்’ கடைப்பிடிக்கப்பட்டதில்  50வது நகர்வில்  ஆனந்த் அபாரமாக வென்றார். சமீபத்தில் நடந்த நார்வே பிளிட்ஸ் ஆன்லைன் செஸ் போட்டியிலும் அவர் கார்லசனை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.  5 போட்டிகளின் முடிவில் ஆனந்த் 10 புள்ளிகளுடன்  முதலிடம் வகிக்கிறார்.  இன்னும் 4 சுற்றுகள் எஞ்சியுள்ளன

Tags : Anand ,Carlson , Anand knocked down Carlson again
× RELATED பெண் தூக்கிட்டு தற்கொலை