×

சூப்பர்-8 சுற்று இன்று தொடக்கம்: தென் ஆப்ரிக்காவுடன் அமெரிக்கா பலப்பரீட்சை

நாட்த் சவுண்ட்: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் பரபரப்பான சூப்பர்-8 சுற்று இன்று தொடங்குகிறது. இந்த சுற்றில் முதல் போட்டியில் 2வது பிரிவில் இடம் பெற்றுள்ள தென் ஆப்ரிக்கா – அமெரிக்கா மோதுகின்றன. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் இந்த தொடரின் லீக் சுற்றில் மொத்தம் 20 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு முறை மோதின. இந்த சுற்றின் முடிவில் 4 பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. ஏ பிரிவில் இருந்து இந்தியா (7), அமெரிக்கா (5) தகுதி பெற்ற நிலையில் பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து அணிகள் வெளியேற்றப்பட்டன.

பி பிரிவில் ஆஸ்திரேலியா (8), நடப்பு சாம்பியன் இங்கிலாந்து (5), சி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் (8), ஆப்கானிஸ்தான் (6), டி பிரிவில் தென் ஆப்ரிக்கா (8), வங்கதேசம் (6) சூப்பர்-8 சுற்றில் நுழைந்தன. பலம் வாய்ந்த நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றுடன் நடையை கட்டியது அந்நாட்டு ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் சூப்பர்-8 சுற்றின் முதல் பிரிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் 2வது பிரிவில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோத உள்ளன. 2வது பிரிவில், (ஆன்டிகுவா) நார்த் சவுண்ட் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் அரங்கில் இன்று 8.00 மணிக்கு தொடங்கும் போட்டியில் தென் ஆப்ரிக்கா – அமெரிக்கா பலப்பரீட்சை நடத்துகின்றன.

தென் ஆப்ரிக்கா: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஓட்நீல் பார்ட்மேன், ஜெரால்டு கோட்ஸீ, குயின்டன் டி காக், ஜார்ன் பார்ச்சூன், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், மார்கோ யான்சென், ஹென்றிக் கிளாஸன், கேஷவ் மகராஜ், டேவிட் மில்லர், அன்ரிச் நோர்க்யா, காகிசோ ரபாடா, ரயன் ரிக்கெல்டன், டப்ரைஸ் ஷம்சி, டிரைஸ்டன் ஸ்டப்ஸ்.

அமெரிக்கா: மொனாங்க் படேல் (கேப்டன்), ஆரோன் ஜேம்ஸ் (துணை கேப்டன்), அலி கான், கோரி ஆண்டர்சன், ஆண்ட்ரீஸ் கவுஸ், ஹர்மீத் சிங், ஜஸ்தீப் சிங், நோஸ்துஷ் கென்ஜிகே, நிதிஷ் குமார், மிலிந்த் குமார், சவுரவ் நேத்ரவால்கர், நிசர்க் படேல், ஷயன் ஜகாங்கீர், ஸ்டீவன் டெய்லர், ஷேட்லி வான்.

The post சூப்பர்-8 சுற்று இன்று தொடக்கம்: தென் ஆப்ரிக்காவுடன் அமெரிக்கா பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : Super-8 round ,USA ,South Africa ,ICC World Cup T20 ,West Indies ,Dinakaran ,
× RELATED டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று:...