×
Saravana Stores

சில்லி பாயிண்ட்ஸ்

* இத்தாலியில் நடந்த ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் பைனல் வரை முன்னேறிய இந்திய வீரர் சுமித் நாகல் (26) உலக தரவரிசையில் 6 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 71வது இடத்தை பிடித்துள்ளார். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள சுமித் நாகல், அடுத்து விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் களம் காண்கிறார்.

* மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் சமீபத்தில் தேசிய அளவிலான ஜூனியர் கிக் பாக்சிங் சாம்பியஷிப்போட்டி நடந்தது. அதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வீராங்கனைகள் உட்பட 45 பேர் பங்கேற்றனர். அதில் தமிழ்நாடு 31 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலம் என 48 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்ததுடன், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றது.

* ஐசிசி டி20 உலக கோப்பையில் சூப்பர்-8 சுற்று தொடங்க உள்ள நிலையில், ‘ஹர்திக் பாண்டியா எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்படுகிறார். ரிஷப் பன்ட் 3வது வீரராகக் களமிறங்குவது நல்ல பலனை தந்துள்ளது. அடுத்த சுற்றிலும் அது தொடரும்’ என்று முன்னாள் சுழல் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

* நடப்பு உலக கோப்பை தொடரில் விளையாடிய நெதர்லாந்து வீரர் சைப்ரண்ட் எங்கல்பிரெக்ட் (35 வயது) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் நெதர்லாந்து அணிக்காக 12 ஒருநாள் போட்டியில் 385 ரன் மற்றும் 12 டி20 போட்டியில் 280 ரன், 5 விக்கெட் எடுத்துள்ளார்.

* பாகிஸ்தான் அணியில் சுத்தமாக ஒற்றுமையில்லை. ஒருங்கிணைந்து விளையாடாமல், ஒவ்வொருவரும் தனித் தனியாக செயல்படுகிறார்கள். பல அணிகளுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். இப்படி ஒரு சூழலை பார்த்ததே இல்லை’ என்று பாக். அணி தலைமை பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் கூறியுள்ளார்.

The post சில்லி பாயிண்ட்ஸ் appeared first on Dinakaran.

Tags : Sumit Nagal ,ATP Challenger ,tournament ,Italy ,Sumit ,Olympics ,Dinakaran ,
× RELATED 2026 காமன்வெல்த் போட்டியில் ஹாக்கி,...