×

சாலையோர மரங்களில் விளம்பர பலகை அதிகரிப்பு-அப்புறப்படுத்த கோரிக்கை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரிலிருந்து பிரிந்து செல்லும் முக்கிய ரோட்டோரம் மட்டுமின்றி, குடியிருப்பு மிகுந்த வீதியோரம் உள்ள மரங்களில், இரும்பு ஆனிகளை கொண்டும், கம்பிகளை வைத்தும்  விளம்பர பலகைகளை வைத்து செல்வது, சில ஆண்டுகளுக்கு முன்பு அதிகமானது. பின் தொடர்ந்து எழுந்த புகாரால், ஆங்காங்கே மரங்களில் இருந்த விளம்பர பலகைகள் அப்புறப்படுத்தப்பட்டது.

 ஆனால் தற்போது மீண்டும் அந்த செயல்பாடு அதிகரித்துள்ளது. நகர் மட்டுமின்றி கிராமபுறங்களில் ரோட்டோரம் உள்ள மரங்களில், பெரிய அளவிலான இரும்பு ஆனிகளை கொண்டு விளம்பர பாதகைகளை அடித்து கட்டி வைத்து செல்கின்றனர். அதிலும், தனியார் மூலம் வைக்கப்படும் பாதகைகளே அதிகமாக உள்ளது.

 பல ஆண்டுகளுக்கு முன்பு , ரோட்டோரம் மரகன்றுகள் வைத்து, தற்போது அவை நல்ல வளர்ச்சி அடைந்து நிழல் தரும் தருவாயில் இருக்கும் மரங்களின் மீது, இரும்பு ஆனி உள்ளிட்ட கடினமான பொருட்களை கொண்டு பதிப்பதால், நாள்போக்கில் அந்த மரங்களின் வளர்ச்சி கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும் என்பதால், ரோட்டோரம் உள்ள மரங்களில் விளம்பர பலகைகளை வைப்பதை தவிர்க்கவும், ஏற்கனவே இரும்பு பொருட்களை கொண்டு பதிய வைத்திருப்பதையும் அப்பறப்படுத்த, சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Billboard , Pollachi: Not only the main road that separates Pollachi from the city, but also the trees on the most residential roads, iron bars.
× RELATED மும்பையில் புழுதிப் புயலால் விளம்பர...