சென்னை: முக்கியத் திருக்கோயில்களில் தலவரலாறு, திருக்கோயிலின் சிறப்பம்சங்கள், கட்டிடக்கலை சிறப்புகள் முக்கிய விழாக்கள் போன்ற விவரங்கள் திருக்கோயிலில் நுழைவாயிலில் விளக்க ஒளிக்காட்சி வைக்க ஏற்பாடு செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் உள்ள முக்கியத் திருக்கோயில்களின் தலவரலாறு, திருக்கோயிலின் சிறப்பம்சங்கள், கட்டிடக்கலை சிறப்புகள் முக்கிய விழாக்கள் போன்ற விவரங்கள் தற்போதைய நிலையில் பேனர்கள்/கல்வெட்டுக்கள் மூலம் காட்சிபடுத்தப்பட்டு வருகின்றது.
ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் திருக்கோயில்களின் அனைத்து விவரங்களும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றது. எனவே இத்திட்டத்தின் ஒரு அங்கமாக திருக்கோயில்களின் தலவரலாறு, திருக்கோயிலின் சிறப்பம்சங்கள், கட்டிடக்கலை சிறப்புகள் முக்கிய விழாக்கள் போன்ற விவரங்களை பக்தர்கள் எளிதில் அறிந்தும் கொள்ளும் வகையில் திருக்கோயிலின் நுழைவு வாயில்களில் விளக்கக்காட்சி(power point presentation) மூலம் காட்சிபடுத்த உரிய நடவடிக்கை எடுத்திடவும் மற்றும் திருக்கோயில்களில் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி மெய்நிகர் காட்சி(Virtual Reality) மூலம் திருக்கோயில் தொடர்பான விவரங்களை காட்சிபடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
மேலும் காட்சிப்படுத்த வேண்டிய விவரங்கள் திருக்கோயிலின் அமைவிட வரைபடம்(Google Location Map) மற்றும் இணையதள விவரங்கள், திருக்கோயிலின் தொலைபேசி எண்கள், தொடர்பு நபர்களின் தொலைபேசி எண்கள், பயணவழிதடங்கள் அதற்கான வசதிகள்(பேருந்து, ரயில், விமானம்), திருக்கோயிலின் தற்போதுள்ள முழுக்காட்சி (Aerial View), திருக்கோயில் புராண வரலாறு(சுருக்கம்), திருக்கோயில் தல வரலாறு(சுருக்கம்), திருக்கோயிலின் வரைபடம் (Temple Layout)- நுழைவு, வழிகாட்டி விவரம், திருக்கோயிலின் சன்னதிகள், முக்கிய பிரார்த்தனைக்கான சன்னதிகள்-பூஜை விவரம், நாள், தேதி, நட்சத்திரம் போன்றவை, திருக்கோயிலின் சிறப்புகள்-திருவிழாக்கள், கல்வெட்டுத் தரவுகள், சிற்பம் மற்றும் ஓவியக்கலை குறித்த தகவல்கள், திருக்கோயிலின் விழாக்கள் மற்றும் தேதி, நட்சத்திரம், திதி முதலியவை, திருக்கோயிலின் அருகிலுள்ள திருக்கோயில்கள் அதன் சிறப்பு சுருக்கம், முதன்மை திருக்கோயிலிலிருந்து அருகிலுள்ள திருக்கோயிலுக்கான வழித்தட வசதிகள் (பேருந்து மற்றும் பிற வசதி), திருக்கோயிகள் மூலம் மேற்கொள்ளப்படும் மக்கள் நல திட்டங்கள் விவரம், (கோ சாலை, யாணைகள் பராமரிப்பு, அன்னதானம், கருணை இல்லம், பயிற்சிப்பள்ளிகள், கல்லூரிகள், புத்தகங்கள் விற்பனை, பிரசாத விற்பனை, தங்கும் விடுதி வசதி, இணையதள சேவைகள் விவரம் போன்றவை, நடை திறப்பு, நடை சாத்தும் நேரம், திருக்கோயில் தொலைபேசி எண்கள், விடுதி வசதி போன்றவற்றிற்கான தொடர்புடைய நபர்களின் கைபேசி/தொலைபேசி விவரம், மக்கள் தொடர்பு அலுவலர் (PRO) இருப்பின் அன்னாரின் கைபேசி விவரம் குறித்து அடியோட்டங்கள் (scroll)தமிழ் மற்றும் ஆங்கிலம் மூலமாக விளக்க ஒளிக்காட்சியில் வெளியிடப்பட வேண்டும், மேற்கண்ட விவரங்களை பக்தர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் திருக்கோயில் நுழைவாயில்களில் விளக்க ஒளிக்காட்சி மூலம் காட்சிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து திருக்கோயில்களின் இணை ஆணையர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.