சென்னை: நீதிபதி கலையரசன் குழுவின் விசாரணை அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த போது பேராசிரியர் பணி நியமனங்களில் சூரப்பா முறைகேடு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.இது குறித்த விசாரணை அறிக்கையை வேந்தராகிய ஆளுநருக்கு அனுப்பும் முன்பு அதை சூரப்பாவுக்கு வழங்க வேண்டும் என நீதிபதிள் கூறியுள்ளனர்.
